புரட்சி கவிதை

புரட்சி

ஷிவஷக்தி
09, June 2017
Views 647

புரட்சி சரியானதே
சூழ்ச்சி உடைந்தோடுமே
மக்கள் எடைபோடுமே
நாட்கள் பதில் கூறுமே..

ஆட்சி விளையாடுதே
சாட்சி சாயம்போனதே
வீழ்ச்சி விரைந்தேறுமே
சூழ்ச்சி உடையட்டுமே

மக்கள் மடமை தீர
சிந்தனை பிறக்கட்டுமே
வாழ்வு நிலைக்கட்டுமே
தமிழன் தலைநிமிர்ந்து
ஜனநாயகம் காக்கட்டுமே..

குள்ளநரிகள் கும்மாளம்
ஆட்சி பிடிக்க துடிக்கிறது
வெள்ளைகாரன் கொள்ளைகாரானாய் சுரண்ட..

உள்ளூர் வெள்ளை நரிகளின்
கொள்ளைகள் கோடியாய் சுருண்டு
எம்மக்கள் வளர்ச்சி சிதறின
சில்லரை போல..

மக்களே உங்களை காத்துகொள்ளுங்கள
புரட்சி எனும் வளர்ச்சியால்
வெள்ளை வேட்டி கறைபடிந்தது
வெள்ளாமை நிலைகுலைந்தது..

ஆமை போல ஆட்சி நடக்க
முயல் போல சூழ்ச்சி நடக்க
மக்கள் மேடை வெகுண்டேழ
வெகு தொலைவு இல்லை..