புரட்சி கவிதை

தளராதே தமிழா..!

சயந்தா
04, June 2017
Views 841

தளராதே தமிழா..!
தலை நிமிர்ந்து வாழும்
காலம் - அது அருகில்..!
மரத் தமிழன் பெயர்
கேட்டால் அஞ்சி நடுங்கிடும்
ஆட்டுமந்தைகள்! - இன்று
ஆரவாரம் போடுகிறதோ..!
அமைதியின் மெய் அறியாது
ஆழும் எண்ணத்தில் - நீ
அடக்க நினைக்காதே..!
ஆழிப்பேரலைக்குள்
அடங்கிப்போய்விடுவாய்..!
சிதைக்கப்பட்டவர்கள் எவரும்
சிதைந்து போய்விடவில்லை..!
விதையாய் வெளிவரும்
காலம் அது - கண்முன்னே.,!
நெஞ்சில் உரத்தோடு
கண்ணில் திமிரோடு
காத்திரு தமிழா..!
உனக்கான காலம்
வெகு தூரம் இல்லை..!