புரட்சி கவிதை

பிணம் தின்னும் சாத்திரங்கள்

30, May 2017
Views 948

மண்ணாசை பிடித்த பேய்களின் நாசம்
பெண்ணாசை கொண்ட
பெருந்திணையாளர்களில் வேசம்
பொன்னாசை பிடித்த பேராசையினம்
பிணம் புசிக்கும் பிண்டங்களால்
பிடித்த தீராப்பிணியிது

சோரம் போகாத சோழன்
சாதி பாராத தோழன்
அவதியுறும் வேளை அணைத்தான்
அழித்திட வந்தவர் வாசலில்
மரண ஓலம் ஒலிக்க செய்தான்
குவலயமே அவன் வீரதீரம் கண்டு
வெட்கிப்போயின
வண்டன்ங்கள் கூடி வதம்செய்தன
அவன் குலத்தை

போகும் இடமெல்லாம் சவக்குவியல்கள்
தோன்றும் நிலமெல்லாம்
மனித எச்சங்கள்
இரத்த ஆறு ஓடிய தடயங்கள்
மாறவில்லை
அத்தாட்சிகள் அங்கே
மிச்சமுள்ள போதும்
அட்டூழியக்காரர்களின் பொய்யுரை கேட்டு
புகழ்கின்றது உலகம்
 
கூடியிருந்து குடியழித்தாவர்கள்
கூட்டங்கள் அங்கே ஆரவாரமாக
இரத்த வாடைக்குள்ளும்
இலாபம் தேடும் கிழநரிகள்
வேசங்களின் கோசம் கேட்கின்றது

எட்டிப்பிடிக்கும் தூரம்
இருந்தது எங்கள் ஈழம்
தட்டிப்பறிக்கச்செய்தார்
காட்டிக்கொடுக்கும் கூட்டம்
தமிழன் தமிழனாக இல்லாததால்
தாயகம் எமக்கில்லாது போனது
மனிதன்மனிதனாக இல்லாததால்
பிணம் தின்னும் சாத்திரங்களும்
சாதிவெறியாட்டங்களும்