புரட்சி கவிதை

ஈழமும் தமிழும்

ஷிவஷக்தி
29, May 2017
Views 626

ஈரநெஞ்சங்கள் சிதறிய
சின்னங்கள் தமிழன்
குவியலாய் மடிந்த கதை
குருதியின் ஈரம்காயாமல்
ஈழவிடுதலை கண்களில்..

விடுதலை நோக்கிய வாழ்வில்
விதவையை கண்ட என் தமிழ்
கூண்டில் அடைக்கப்பட்டு
சித்தரவதை கண்டது
சுதந்திரம்  தேடிய விழிகளில் கண்ணீர்
காணிக்கையாக திரன்டது..

பெண்களை வல்லுறவு செய்த
ஓநாய்கள் சிறிமிகளையும்
சிதைத்த சில நேரங்கள்
தமிழினம் தாங்கிய மரணங்கள்
தலைவன் மண்ணில் வீழ்ந்த
தருணங்கள்..

நான் மறவேன்
விடியலும் விடுதலையும்
தமிழன் உணர்வாய்
ஒவ்வொரு பொழுதும் விடிந்து விட
எம் தமிழனின் தலைநிமிர்வு
வீரம் கொண்ட நெஞ்சம்
வெடிக்கும் எரிமலை..