புரட்சி கவிதை

தேசிய இனத்தின் தமிழச்சி

பிறேம்ஜி
23, May 2017
Views 779

ஏகாதி பத்திய எதிர்ப்பின் துரோக எதிரியின்
எள்ளி நகை ஆடல்கள் இசைப்பிரியா
தேசிய இனத்தின் தமிழச்சி
ஏகாதி பத்தியதை கருத்து
மூலமாக எதிர்த்தாய் நீ
கண்ணீர் நெருப்பு எடுப்போம்
களை எடுப்போம்
துரோக கோழை எதிரியானவன்
உன்னையும் உம் தோழியரையும்
ஏன் தோழர்களையும் மான வன்மம் படுத்தி
வன்மம் செய்தான்

ஏன் இதுவும் இனத்துரோகம்
மனித சுய உரிமை இனத்துக்கு வேண்டும் என்று
சுய ஆட்சி வேண்டும் என்று சுய நிற்நயம் வேண்டும்
என்று உண்மையில் உயிரை துச்சமென மதித்து நச்சு
மாலை அணிந்து நாம் எல்லாம் நின்றபோது
அசைக்க முடிய வில்லை
எதிரிகளால் அந்த ஏகாதி பதிகளினாலும்

எந்த வெறித்தனம் உன்னையும் உன் மக்களையும்
உன் இனத்தையும் ஒட்டு மொத்தமாக எதிர்த்ததோ
துரோக எதிரி ஆனவன் ஏகாதிபத்தியத்தின் ஏன் ?
ஒரு இனமே அழியக் காரணமான வல்லரசுகளும்
வல்லாதிக்க அரச அதிகாரிகளும்
கை கட்டி கைக்கூலிகளாக சேர்ந்து அழித்தது
அழித்தது அன்று
தமிழிழ மண்ணில் தமிழ் ஈழ இராணுவத்தின்
ஆயுதம் மௌனிக்கப் பட்ட பிற்பாடு

நான் என்ற திமிர்
நான் என்ற அகங்காரம்
நான் என்ற ஆணவம்
துரோக எதிரி ஏறி மிதித்தான்
குலிப் படைகள் கும்பிடும் நாள்
வெகு விரைவில் இல்லை
நாம் கதறக் கதற உன்னுடைய
புத்த பிக்குவின் புத்தன் முன்னிலையிலும்
வன்மம் செய்யத்துணிந்தாய்
புல்லனே புத்த மதம் எவ்வளவு
புனிதக் கருத்தை சொன்னது
உலகத்துக்கு அந்தக் கருத்தையும்
வன்மமாகக் கொண்டு
வன்மம் செய்தாய்

அதே வேளையில்
உன் சகோதரிக்கோ உன்னுடைய இனத்துக்கோ
நடந்திருந்தால் என்ன செய்வாய் துரோக எதிரியை
புத்தன் இருந்திருந்தால்
உனது வன்மத்திலும் கேவலத்திலும் கேவலம்
அந்தப் புத்தன் துப்பாக்கி சன்னத்துடன்
எம்பக்கம் உண்மையில் உயிருடன் நின்று
இருப்பான்

புத்தனைச் சாட்டி புத்த புனித யுத்தம்
என்கிறாய் இன அழிப்புக்காக
வன்மப் பதிவு
துரோக எதிரியே இனி உன்னை புத்தன்
எதிர்ப்பான் பார்த்திரு
பூர்விக மண்ணில் வாழக் கூடாது
என்று புத்தன் சொன்னானா?
கலியுகக் கடவுள் சொன்னானா?
ஏகாதி பத்திய அரசு சொன்னதா?
புத்தன் மதம் சொன்னதா?
இவ்வாறு வன்மைக் கொடுரக்
கற்பழிப்பை செய்யச் சொல்லி
மாவீரத்தின் மைத்தினியே
இசைப் பிரியாவே

எதிரி துரோக வாதிகளால் கேவலம்
செய்ததால் உனது ஆத்தா
இடது வலது பக்கம்
பார்க்காமல் சொர்க்க ஆத்மா
நேரடியாகவே அல்லது நேர்

முன்னிலையில் இறைவனின் பாதம்
பட்டு அடையும் நிலை உமக்கு இருந்திருக்கும்
அதை எழுதும் பாகம் எமக்கு கிடைத்திருக்கும்
இசையும் பண்ணும் என்றென்றும் இன்னும் எமது
இதயத்தில் இதமாக ஒலி அலையில்
ஒலிக்க விட்டு நீயெங்கே சென்றாய்
எதிரிக்கு கிலி கொள்ளப் வைக்கும்
வன்மம் பிடித்த பேரின வாதிகளின் வளைந்து
கொடுக்காத வீரியம் இது

இவைகள் நேர்மையின் எழில்கள் ஆகும்
எள்ளி நகை ஆடப் படும்
குர்ரக் குமுறல்கள் மறைக்கப் படலாம்
காலங் கடந்தும் நீதிக்கு புறம்பான
நீதீ நீமிர்ந்து மண்டி இட்டால்
மன்ட்சாட்சி இஞ்சிகூட நகராது
இதை படிக்கும் பொழுது புத்தன்
எதிர்ப்புத் துழை இருந்தால் கூட எதிர்ப்பான்
கோழை எதிரியே துரோகத்தின் எதிரியே
ஏகாதி பத்தியமே இந்த இனச் செயலை
கோழை கூட துவக்கு ஏந்துவான்
நாடு விட்டு கண்டம் வந்த
ஈழப் புலம் பெயர்ந்த வர்களும்
எழுத்து கருவி கொண்டு
கூட இதை எழத்தாமல் இல்லை

ஆனால்
போர்களும் எழுத்து ஆணியாகப் பதியப்படும் புலம்
பெயர்ந்த தமிழ் மொழியால் ஆக்கப்படடவர்
பெயர்
பிதற்றி எழுத வில்லை உனது உணர்ச்சி
புரட்சி மிக்க பாடல் வரிகளும்
மிக்க பாடல் வரிகள் எழுதத் தூண்டுகிறது
தமிழ் இசையின் விம்பம் இசைப்பிரியா
நீ இன்று விழவில்லை இசையால் இசைகொண்டு
செய்த புரட்சி புகழாரம் உமது
இப்படிக்கு பெயர் குறிப்பிட
முடியாத நாட்டிலும் அகதி புலத்திலும் அகதி
தமிழ் இளையோர் குற்றம் காணல் மன்றம்