புரட்சி கவிதை

மே 18

18, May 2017
Views 899

வீழ்ந்திடா வீரம் கொண்டு
மண்டியிடா மானம் காத்திட
எதிர்த்து நின்றன மறவா்
படையணிகள்.

எரி மலையானது போர்க்களம்
ஆற்றாமை கொண்ட
சிங்கள ராஜபக்ச கூட்டணி
அந்நியா் படையையும் ஏவி விட்டன

ஐ.நா சபையென்ன அந்த
ஆண்டவனே எழுந்து வந்தாலும்
இனி தமிழினத்தை யாரும்
காப்பாற்ற முடியாதென
சீறிப் பாய்ந்தன சிங்களக் காடைகள்

கொத்துக் கொத்தாய்
சட்ட விதிகளையும் மீறி
தமிழினத்தையே
கொண்றொழிக்க
தமிழீழ தேசமே
குருதி தோய்ந்த நாள்.