காதல் கவிதை

காதல் கீதம்

ஷிவஷக்தி
31, May 2017
Views 542

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
துள்ளி விடும் மீன்கள் அவள் கண்ணாதோ
மலர்ந்த ரோஜா அவள் இதழ்ஆனதோ
மேல் இருக்கும் நெற்றி கடல் ஆனதோ
தள்ளி விடும் கூந்தல் அலையானதோ..

அவள் மனம் நான் பதித்த தடமானதோ
அவள் கால் பாதம் கண்ணகி சிலம்பானதோ
அவள் பேசும் வார்த்தை தேன் அமுதானதோ
அவளோடு என் வாழ்வு சுகமானதோ

நிலவில் துயில் கொள்ளும்
அவள் மனம் அழகானதோ
நான் சூரியனாய் அவளை தொடும்
வெட்கம் சிறப்பானதோ!
கௌரி மானாய் அவள் துள்ளல்
விளையாடுதோ

சந்திரமதியாய் அவள் வாழ்வு
உருவானதோ
தங்கமீனாய் அவள் கண்கள் எனை தேடுதோ
என் மனம் தூண்டில் போட
தடுமாறுதோ
என் இதயம் எனை கேட்காமல்
இடம் தேடுதோ
அவள் பதில் கூறும் நேரம்
என் வாழ்வு வரமானதோ..