ஏனையவை

குருவுக்கு குரல்

ஷிவஷக்தி
30, May 2017
Views 376

காற்றின் ஓசை கேட்கும்
அதில் உன் கருணை
பார்வை வீசும்
காணாமல் மனமோ போகும்..

அமைதி அங்கே தோன்றும்
அலையால் கணமே மாறும்
உன் கருணை பார்வை வீசும்
என் உயிரை மெல்ல கரைக்கும்..

அன்பினாலே அலையானாய்
கண்ணணீராலே அணைக்கிறாய்
அடையாளத்தை உடைக்கிறாய்
அமைதியை படைக்கிறாய்.

உயிரின் அன்பினால்
இயற்க்கையில்
கலக்கிறாய்
புரியா புதிரையும்
தகர்த்தே நீயும் உடைக்கிறாய்
இசையாலே தொடுகிறாய்..

ஆனந்த அலையால் வீசுகிறாய்
விடுதலை விதையை விதைக்கிறாய்
விடை தேடும் உயிரை கண்ணீராலே
அணைக்கிறாய்..

உயிர்கள் உன் மடியில் பேச
உன்னத அன்பும் நீ வீச
விடுதலை வரமும் கொடுக்க
விடைபெறும் உயிர்கள் தேட
கருணை பார்வை பட்டால்
செல்லும் இடம் எங்கே...