காதல் கவிதை

காதலித்து பார்

10, June 2017
Views 923

காதலித்து பார் அன்பின் அர்த்தம் புரிவாய்
அன்பின் அர்த்தம் புரிவாய் எனின்
உன் தனிமை வாழ்வுக்கு புது சுகம் கிடைத்து
காதல் என்ற தேனும் உன் மனம் முழுதும் ஓடும்
வாழ்வும் அர்த்தம் உள்ளதாக தோன்றும் இதனால்
உன் மனம் எதிர்பார்ப்புகளை நோக்கி அலை பாய்ந்து
கற்பனை என்ற சிறகில் சிறகடித்து பறப்பாய்..

அங்கே உன்னையே உன்னில் மறைத்து
உலகத்தையே உன் கைவசம் ஆக்கி
குழந்தைகள் அடையும் இன்பம் போல
உன் உள்ளம் இன்பம் அடையும் காதலித்து பார்

அவள் பேசும் சொல்
உன் காதுகளில் சங்கீதமாய் ஒலிக்கும்
நரண்புகளும் புது இன்பம் அடைந்து
அவள் ராகங்களை சுமக்கும் காதலித்து பார்
உன் உள்ளமும் காதல் சுகம் அடைந்தாள்
நீ வெறுப்பு கொண்டவர்கள் மீதும் காதல் கொள்வாய் 
பிற உயிர்களும் அன்பானவை என மனம் எண்ணம் கொள்ளும்
காதலித்து பார்
இந்த உலகமும் அழகாக தோன்றும்