காதல் கவிதை

போலி வேஷம்

07, June 2017
Views 412

உன் பொய்யான
பாசம் புரியாத வரை நீ
எனக்கு கிடைத்த
உண்மையான உறவு
என கொண்டு உன்னுடைய
இன்பம் என்னுடைய
கனவாக எண்ணி என்
உயிரிலே உனை
இணைத்து வைத்தேன்

நீ பொழியும் அன்பு வார்த்தை
என் மனதின் மன அழுத்தத்தை
நீக்கி ஆயிரம் இன்ப கனவுகளை
உருவாக்கிட்டு செல்லும் இதனால்
சலனம் இன்றி என் வாழ்வும்
நகர்ந்தது இருந்தாலும் காரணம்
இன்றி நீ என்னுடன்
பேசாமல் சென்ற போது தான்
உன் போலியான அன்பை
என்னால் புரிய முடிந்தது

எம் இமையும் மூட மறந்து
உன் காதலுக்கு என்னை
அடிமையாக்கி சென்றது
என் மனதை சமாதான படுத்த
முயன்றும் பெண்ணே
அது மட்டும் முடியாமல்
ஒரு வழி பாதையில் தத்தளிக்கிறேன் .