நடப்பு கவிதை

கிளியாகிப் பறக்கும் கனி

19, February 2017
Views 867

மரத்தின் கனியொன்று
இலையோடு
பறந்து போவது போல்
இதோ கிளி  பறந்து போகிறது
இந்த உலகமே
நான் தான் என்பதுபோல்
அந்த மரம் ஒய்யாரமாக
ஆடிக்கொண்டிருக்கிறது
காரணத்தோடு
எதுவும் நடப்பதில்லை
காரணமின்றியும்
எதுவும் நடப்பதில்லை
அது நடக்கிறது அவ்வளவே.