காதல் கவிதை

காரணங்கள் தீர்வதில்லை

10, December 2016
Views 1187

அம்மாவுக்கு
உடம்பு சரியில்லை
அப்பா வீட்டில் இருந்தார்
விருந்தினர்கள்
வந்திருந்தார்கள்
பலகாரம் செய்து கொண்டிருந்தேன்...
வெய்யில்
மண்டையைப் பிளந்தது
மழை வரும் போலிருந்தது
காரணங்கள் தீர்ந்தாபாடில்லை.
எளிதாய்க் கிடைக்கும்
காரணங்கள் இல்லையென்றால்
மிகவும் சிரமப்பட்டுத்தான்
போயிருப்பாய்.
வாராததற்குக் காரணங்கள்
பலவாக இருந்தாலும்
காத்திருந்ததற்குக்
காரணம் ஒன்றுதான்.