நடப்பு கவிதை

இறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

05, October 2016
Views 1479

சிறுநீர் கழிக்கும்
பீங்கான் தொட்டியில்
சிற்றெறும்பைக் கண்டதும்
சட்டென்று அடக்கி
அப்படியே நகர்ந்தேன்
அடுத்த பீங்கானுக்கு,
அப்படியே அடுத்ததற்கு…
ஞாயிற்றுக்கிழமைகளில்
பலியிடும் நாட்டுக்கோழிகளை
இப்படியாகத்தான்
சமன் செய்துகொள்கிறேன்.