ஏனையவை

ஒரு கவிதையின் பயணம்...

17, August 2016
Views 1517

இவ்வளவு நேரமும்
அந்த பூங்கா இருக்கையில் அமர்ந்திருந்த
பறவையிடம் இருந்த கவிதை,
காரணம் ஏதுமின்றி அது பறந்துபோனவுடன்,
இருக்கையில் அமர்ந்து கொண்டது.
இப்போது அந்தக் கவிதையின் மீது
ஒரு பெண் வந்தமர்கிறாள்.
சிறிது நேரம் கழித்து
கவனம் கலைத்து எழுந்துபோகிறாள்
பின்புறம் அப்பிக் கொண்ட
என் கவிதை குறித்த பிரக்ஞையின்றி!...