புரட்சி கவிதை

கடவுள் தப்பிவிடக்கூடாது

29, July 2016
Views 1836

உன் கடவுளை
உள்ளே வைத்துப்
பூட்டுவது எதற்கு,
எவரும் களவாடுவதைத்
தடுக்கவா?” என்றேன்.
“என் கடவுளின் மேல்
கைவைக்கும் துணிச்சல்
இங்கு எவனுக்கும் இல்லை” என்றான்.
“பின் எதற்கு பூட்டு?”
“‘யாருமில்லாதபோது
அவர் தப்பித்து விடக் கூடாது!”