ஏனையவை

மந்திரமில்லை

29, May 2017
Views 220

முதல் காதல் மட்டுமல்ல
தந்தையிடம் முதல் அடி
ஆசிரியரிடம்  முதல் திட்டும் 
மறக்க முடியாதவையே...!

தந்தையே நீர் திடீர் என
எதற்காக கோபப்பட்டீர்..?
எதற்காக அந்த அடி அடித்தீர் ..?
என்றெல்லாம் எனக்கு
இன்றுவரை -புரியவில்லை...!

ஆனால்
அந்த அடிதான் எனக்கு
கடைசி அடி என்பது
வாழ்க்கையில் மறக்க
முடியாத அடி ....!