காதல் கவிதை

நீ இல்லையேல் கவிதையில்லை

13, May 2017
Views 804

ஆயிரம் கவிதைகள்
ஆயிரம் பின்னூடல்கள்
ஆயிரம் கவிரசிகர்கள்
பலநூறு சிறப்புகவிதை ....!

அத்தனையையும்
தாண்டிய சிறப்புகவிதை
என்னவள் சொன்ன வார்த்தையே.....!

என் கவிதையை
ரசித்து விட்டு சொன்னாள்
இத்தனை கவிதையை
எழுதிய உன் கையில்
முத்தமிட்ட ஆசை......!

அவளுக்கு புரியவில்லை.....
அவள் இல்லையேல் எனக்கு......
கவிதையே இல்லை............!