காதல் கவிதை

எவரேனும் உண்டோ...!

சிந்து.எஸ்
01, February 2017
Views 953

அவன் முதல் பார்வையில் ஏதோ ஒரு கவர்ச்சி
நான் பார்த்தேன் அவனும் பார்த்தான்
ஆனால் அவன் பார்வையில் ஒரு புன்னகை
அதன் காரணம் தான் என்னவோ
அறிவதறியாது சிந்தித்தேன்  
அவனின் பெயரோ எதுவுமே தெரியாத
அந்த நிமிடங்கள்
அதற்கிடையில் ஒரு மாணவி மறைத்தாள்
அவன் மீதான பார்வையை   
சில நேரத்தில் என் கண்களில் மட்டுமல்ல
அவன் கண்களிலும் ஒரு ஏக்கம்
அந்த நொடிகள் நீளாதோ என ஒரு சிறு எதிர்பார்ப்பு
எனக்கு மட்டுமல்ல அவனுக்கும்
சிறிது நிமிடங்களின் பின்னர் நான் இறங்கி விட்டேன்
அவனும் பார்வையாலே கண்ணீர் மல்கினான்  
மீண்டும் ஒரு முறை அவனை பார்ப்பேனோ
என்ற ஒரு ஆவல் இன்றும்  என்னுள்.....