காதல் கவிதை

எதற்காக பார்க்கிறாய்...!

சிந்து.எஸ்
28, January 2017
Views 1142

எதற்காக என்னை பார்கிறாய்
எல்லாமே தொலைத்தவன் நான்
இன்பத்தை கண்டதில்லை
துன்பத்தில் மிதப்பவன்
காலத்தை துறந்தவன்
கற்பனையில் மிதப்பவன்
கற்றலில் மறந்தவன்
கண்ணீரில் மிதப்பவன்
தாழ்வுக்கு சொந்தமானவன்
தமிழ் வாழ துடிப்பவன்
முகவரி தொலைத்தவன்
முதல் வரி முடியுமுன்
மூச்சிழந்து போக நினைப்பவன்
இவனே அவன் அவனே இவன்...!