காதல் கவிதை

அகத்தின் அகல்விளக்கானாய்...!

சிந்து.எஸ்
18, January 2017
Views 996

அன்பிலே நிறைந்து
அனுதினமும் அகத்தாலே
நான் நினைக்க
அன்புகள் தந்தாய்

ஆற்றலில் அருகிருந்தாய்
ஆசையிலும்
கலந்திருந்தாய் (நிறைந்திருந்தாய்)

இன்பத்திலும் பங்கு கொண்டாய்
ஈடு இணையற்ற  துன்பத்திலும் துணை நின்றாய்
உயர்வுக்கும் ஏணியானாய்
உறவுகள் பல இருக்கையிலும் என்

ஊக்கத்திலும்   நீயே   உயர்ந்து நின்றாய்
என் ஏற்றங்கள் காணவென்று

ஏக்கங்கள் தாங்கிக்   கொண்டாய்
ஐயங்கள் போக்கிட நீ எழுந்தாய்

ஒரிரு வார்த்தையில்
ஓயாத அர்த்தங்கள் கொடுத்தாய்

ஔவைபோல் அறிவுரை
நீ கொடுத்து என் அகத்திலே
அணையாத அகல்விளக்கானாய்..!