நடப்பு கவிதை

தைப்பொங்கல் இது...!

சிந்து.எஸ்
15, January 2017
Views 732

எருதுகள் இரண்டில்
பூட்டிய கலப்பை
இளைஞர்கள் கையிலும்
வரவேண்டும்.
உழுதவர் அழுதவர்
எனும் நிலை போக்கி
உலகுக்கே-நல்
உணவுகள் தரவேண்டும்.

குளிசைகள்,ஊசிகள்
கொடியது என்பது
குழந்தையில் இருந்தே
புரிதல் வேண்டும்.

இயற்கையோடொட்டி
எம்மினம் வாழ்ந்தே-நூறாண்டு
எமக்கான காலமும்
பெறவேண்டும்.