ஏனையவை

வெற்றிகளில் உனை வெறுப்பேன்!

24, October 2016
Views 1754

கடல் அலைகளும்
தழுவக் காத்திருக்கும்
வெண்மணல் கரைகளும்
நட்பின் இலக்கணங்கள்

துயரங்கள் துடைத்து
வாழ்த்துக்கள் பகிர்ந்து
வழியெங்கும் வாசம் வீசும்
நட்பின் வழித்தடங்கள்

இரண்டு இதயங்கள்
ஒன்றாய் சிந்திக்கும்
ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்தல்
நட்பின் சுகம்...

யுகங்கள் வாழ்வதற்கு
நட்பு ஒருவரம்
வஞ்சகங்கள் கொண்ட மனதிற்கு
அது ஒரு சாபம்

அன்பின் வழி வரும் நட்பில்
வஞ்சகங்கள் உண்டு சிலரில்
நட்புக்கு அது கேடு
நமக்கோ மனதிற்குள்
ஒரு நிரந்தர வடு

சட்டைப் பை
வெறுமையாய் இருந்தாலும்
நட்பின் பாசம்
தூரமாய் போவதில்லை
பணமும் பதவியும் பார்த்து
நட்புகள் வருவதுமில்லை

பணம் பார்த்து
பதவியையும் பார்த்து
மதிக்கும் நட்புகள்
கடைசியில்
மனதுக்குள் ஒரு வலி தான் மிஞ்சும்

சொகுசு வாழ்க்கையும்
சொந்த ஊர்திகளும்
என் காலடியில் இருந்தது
ஓர் காலம்
அனைத்தும் துறந்து
அயல்நாடு சென்றேன்
அகதியாய்
எல்லாம் என் இறந்த காலம்

எந்தக்குழந்தையும்
எழுந்து நடப்பதில்லை
தத்தித் தடுமாறி
எழுந்து நிற்காமல்

எந்தன் வாழ்விலும்
உயரங்கள் தொட்டதில்லை
வீழ்ச்சிகள்
என்னை வதைக்காமல்

வல்லோனின் அருளால்..
எல்லா உயரங்களும் தாண்டி
என் வெற்றிக்கொடியும் வீசும்
ஒருநாள்..
அக்கொடியின் நிழல் கூட
உன்னை வெறுக்கும்....