காதல் கவிதை

என்னை இனியும் தேடாதே..!

17, September 2016
Views 2191

பனித்துளிகள் கொட்டும் இரவு
துளித்துளியாய் மகிழ்ச்சிப் பிரவாகத்தில்
மூழ்கிக் கிடக்கின்றது மனது

பரிதவித்து அழுத காலங்கள்
கடந்துவிட்டேன் இன்று
கணங்கள் தோறும் களித்திருக்கின்றேன்
தேவதை அன்பில்

நீமறுத்தாய்..
வாழ்வைத் தொலைத்ததாய்
உணர்ந்தேன்

என்னைப் போலோருவன்
உனக்கில்லை இன்று
உனைவிட மேலாய்
இன்னொருத்தி என் வாழ்வில்

உலகம் ஒரு நந்தவனம்
ஆயிரம் மலர்கள் அங்கு மலரும்
நீ மட்டும் தான் அழகென்பதில்லை

நீயில்லாத வாழ்க்கை
கனவாகத் தோன்றியது அன்று
அதை நினைத்தாலே
கவலைதான் இன்று

இனியும் வேண்டாம்
அந்த நினைவுகள்
இனிமை பொங்கும் என்றும்
இனி என் வாழ்வில்

நன்றிகள் சொல்வேன்
என்னவளுக்கு
நெஞ்சில் சுமந்திருப்பேன்
வாழ்வில் என்றும்

ஒரு வழிமூடிய இறைவன்
இன்னொரு வழிதந்தான்
உன்னிலும் உயர்வாய்
இன்னொருத்தியும் வந்தாள்
அன்பாலே என்னை
தாலாட்டினாள்...

இழப்புகள் எனக்கில்லை
உன் நினைவுகளும்
மனதில் இல்லை..

தொலைவாகிப் போன என்னை
இனியும் தேடாதே..