காதல் கவிதை

என் நினைவுகளில் மொத்தமாய் நீ....!

16, December 2015
Views 3966

உனக்கும் எனக்கும் எதுவும்
இல்லை என்று சொல்லவா?
இல்லை நம் இருவருக்கும்
மட்டும் தெரிந்த காதல் சொல்லவா?
காற்றும் கூட நம் காதல்
சுமந்து சென்றதே -அன்று
நம் கண்கள் பார்த்த திசையெங்கும்
மலர்கள் பூத்ததே..

வானம் பரந்த தூரம் மட்டும்
என் பார்வைக்குள் நீ பரவிக்கிடந்தாய்
இதயம் எங்கும் மொத்தமாய்
உன் நினைவுகளை உருக்கிக் கலந்திட்டாய்..
நீருக்குள் நீந்தும் மீனாய் நான்
உன் நினைவுகளில் நீந்தினேன்
அந்தி பகல் எப்பொழுதும்
உன்னையே நினைத்திருந்தேன்

அர்த்தங்கள் இல்லாது கழிந்த வாழ்க்கையில்
ஒரு நந்தவனமாய் வந்தாய்
பூத்துக்குலுங்கி வசந்தம் வீச முன்னே
நடுவழியில் பிரிந்து சென்றாய்

ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்ந்திட்டாலும்
அழியாது உன் நினைவுகள்
ஆழமாய் மண்ணுக்குள் உடல் புதைந்த பின்னும்
இதயத்தில் படிந்திருக்கும் அதன் தழும்புகள்

என்னை மறந்தாய் நீ- மன்னித்தேன்
அறியேன் என்று சொன்னாய் நீ –
நொறுங்கியே போனேன் நான்
காதல் என்பது ஒரு சுகானுபவமே
வயதுக் கோளாறில் வரும் ஒரு இன்ப சாகரமே..
மறைத்திட நீ முயன்றாலும்
என்னால் மறந்திட முடியவில்லை
இறக்கும் வரை உன் நினைவுகள்
மனதை விட்டும் அகலப் போவதுமில்லை..