காதல் கவிதை

உன்னிடம் பலிக்காத ஜம்பங்கள்

20, May 2011
Views 6687

தினம் தினம் சட்டை
அயர்ன் பண்ணிக் கொள்வேன்
உனக்காக….

எழுதாத பேனாக்களை
பாக்கெட்டில் குத்திக் கொள்வேன்
பந்தாவுக்காக

எதிர்ப்பட்டவர்களெல்லாம்
ஓடியொதுங்கும்படி வேகமாய் விரைவேன்
வீரனென்று என்னைப் பேச..

காண்பவர் எல்லாம் பிரமிக்கும்படி
ஸ்டைல் செய்து கொள்வேன்..
அசத்திப் பார்ப்பதற்காக..

வண்ண வண்ண உடைகளும்..
என்னென்னவோ நடைகளுமாய்..
என் வாழ்க்கை கழிந்து போனது..
உன்னை அடைந்து கொள்வதற்காக..

எனக்காக நான் வாழ்ந்ததில்லை..
அனைத்தும் உனக்காகவே..
என் வாழ்க்கையில் நடந்தது

நீயோ விலகிப்போனாய்..
வீண் பகட்டுக்காரனென
எனக்கு நாமம் சூட்டி…