ஏனையவை

லாயக்கற்றது உன் நட்பு

25, April 2011
Views 7356

நட்பெனும் மலர் தூவி
நான் காத்திருந்தேன்
சுண்ணாம்புக் கால்வாய் திறந்து
உன் துரோகம் காட்டினாய்…

அறிவுரைகள் கூறி..
உன் வழிமாற்ற முயன்றேன்..
அடுக்கடுக்காய் தவறுகள் செய்து
பிடிவாதமாய் மறுத்தாய்..

கண்மூடியாய் நடந்து
கண்மாய்க்குளல்ல…
பாதாளத்துக்குள் நீ
விழப் போகின்றாய்..

இன்னும் பலரிடம் இதயத்தை
கொடுத்தவனை..
நம்பி நீ ஏமாந்து விடாதே..
எச்சரித்தேன்..

உனக்கே நான் இதயமதை
தரமுயன்றதாய்..
குற்றம் சாட்டினாய்
நட்பையே களங்கப்படுத்தினாய்..

மூடிமறைத்தவர்களெல்லாம்
புனிதர்களல்ல..
முகத்துக்கு நேரே சிரிப்பவர்களெல்லாம்
நேசமானவர்களுமல்ல..

வழிதவறிச்செல்லும் செம்மறியாடும்
மூடிமறைக்கத் தானே செய்கின்றது..
முதலையும் தான் வாய்திறந்து காட்டியே..
முழுதாய் விழுங்கப் பார்க்கிறது

ஒரு நாள் புரிந்து கொள்வாய் நீ…
என் நேசத்துக்குள்; வேசமற்றிருந்ததை..
உன்மீதான பாசங்கள்
இரைமீதான ஓநாய்களின்
வேசமென்பதை…