ஏனையவை

கேள்வி கேட்கிறேன்...

Inthiran
04, June 2017
Views 657

வந்த பாதையில் வருத்தங்கள் இல்லை
சென்ற பயணத்தில் செல்வாக்கு இல்லை
சிந்தை நிறைந்ததில் செல்வங்கள் இல்லை
இந்தப் பிறவியோ போதவும் இல்லை

பந்த பாசங்கள் புரிவது இல்லை
நொந்த போதிலும் நேர்வழி இல்லை
சந்து பொந்துகள் சரிப்படவில்லை
சிந்து பாடியும் சுகம் வரவில்லை

என்ன மனிதர்கள் என்ன கடமைகள்
என்ன உரிமைகள் எடுத்துச் சொல்லவே
வண்ண வண்ணமாய்க் கனவு வந்தது
வந்த கனவுகள் போதை தந்தது

இந்த நிமிடமே எனக்குச் சொந்தமாம்
கந்தை ஆகியது கசக்கிக் கட்டினேன்
அந்த இறைவனை அழைத்து வந்து நான்
அவனை அறியவே கேள்வி கேட்கிறேன்