காதல் கவிதை

சொல்லிவிட்டேன்

Inthiran
01, June 2017
Views 783

அள்ளித்தெளிக்குது அன்புமழை அதில்
துள்ளிக் குதிக்குது இன்ப முயல் அந்தக்
கள்ளி எடுத்த இதயத்திலே இன்னும்
வெள்ளி முளைக்குதே என்ன செய்ய

கன்னம் சிவக்கக் கதைபேசி அந்த
அன்னம் நடந்தது ஊடல்களோ பல
வண்ணக் கனவுகள் வந்து வந்து இங்கே
என்னைக் கடப்பது தேடல்களோ

செக்கச் சிவந்த இதழ்களினால் அவள்
பக்கம் வந்து தந்த முத்தத்திலே உள்ளே
எக்கச்சக்கம் ஆன ஆசைகளை நானும்
வெட்கமேதுமின்றிச் சொல்லிவிட்டேன்