ஏனையவை

ஆவி மயங்குமோ…!

Inthiran
30, May 2017
Views 456

சந்தன மேனியில்
குங்குமம் மின்னுதே
சங்கம நேரமோ
அந்தி வானில்

சிந்தையில் ஆயிரம்
சிந்தனை தோன்றுதே
மந்திரம் ஆனதோ
மாயவனே

செந்தமிழால் ஒரு
சந்தமே கேட்குதே
முந்தி எழுதவோ
பூங் கவிதை

அந்த நிமிடமே
ஆவி மயங்குமோ
இந்திர வில்லென
இவ்விடமே