காதல் கவிதை

ஆகாயத் தாமரை

Inthiran
29, May 2017
Views 345

எண்ணக் குரங்கு துள்ளி
எங்கெங்கோ தாவுமுன்னே
முன்னுக்கு வந்து நின்றால்
முன்னேற்றம் நமக்கன்றோ

அன்னம் சமைத்துனக்கு
அமுதூட்ட வேண்டாமோ
திண்ணையிலே அமர்ந்து
தேன் அள்ளக் கூடாதோ

கன்னக் குழி பார்த்துக்
கவி பாடக் கேட்பாயோ
சின்னக் கதை பேசிச்
சிரித்திருக்க மாட்டாயோ  

என்னே இயற்கை இந்தப்
பெண்ணே அழகு மங்கை
என்றே தமிழ் மணக்க
என்றென்றும் பாடேனோ

வாடா மல்லிகை போல்
வடிவாகப் பூத்திருக்கும்
ஆகாயத் தாமரையை நானும்
அமைதியாய் இரசிக்கின்றேன்