காதல் கவிதை

ஏழை நான் இன்று முதல்….!

Inthiran
23, May 2017
Views 837

உன்னோடு பழகியதால்
உண்டான பந்தமதில்
என்னோடு அழகியலும்
ஒன்றாகிப் போனதடி

பண்ணின்றிப் படிக்கின்ற
பாடல்களும் உன்னாலே
பொன்னான பாடல்களாய்
என் காதில் விழுகுதடி

பெண்ணே நீ எங்கிருந்தாய் நீ என்
கண்ணுக்குள் விழுந்தபின்னே அடி
கண்ணே எனக்கு உன்னையன்றி
எந்தக் கடமைகளும் தெரியவில்லை

என் முன்னே யார் வந்து
சொன்னாலும் புரிவதில்லை
நீ வந்து பார்த்தாலோ உலகில்
எல்லாமே புரியுதடி

காலப் பிழையுயில்லை
கவலைக்கு இடமுமில்லை
ஏழை நான் இன்று முதல்
ஏகாந்த அரசனடி