ஏனையவை

காற்று எந்தன் ஊற்று

Inthiran
22, July 2017
Views 293

நீல நதி ஓடும் அங்கே
நீண்ட பெருங்காடு அதில்
சோலைமலர் தூவும் அந்தக்
காற்று எந்தன் ஊற்று

காலை தினம் மாலை சிறு
கவலை வந்து சேரின்
ஏழை இந்த நாளைப் பல
வேளை நினைப்பூட்டும் 

காதலுள்ள மோதல் அது
ஊடலெனும் சாடல் ஒரு
வாடை பட நோகும் அது
வல்ல தமிழ்ப் பாடல் 

செந்தமிழில் பாடும் நல்ல
சந்தமுள்ள கவிதை அதை
சொந்தமுடன் நாடும் நான்
முந்தி வந்த பந்தி