ஏனையவை

ஒழுக்கம் கேடயம்....

20, July 2017
Views 209

கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம்...
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம்....
கேசவன் நினைவில் வாழ்தல் கேடயம்....
கேள்வன் மனைவிக்கு கேடயம்....!

கேட்பார் சொல் கேளாதே
கேட்டவுடன் எதையும்  கொடுக்காதே....
கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே....
கேவலமானவன் என யாரையும் கருதாதே....!

கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி
கேட்டறிதல்   அறிவுக்கு  உறுதி....
கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி....
கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி....!