நடப்பு கவிதை

வாழ்க தமிழ்!

25, May 2017
Views 701

ஆண்டாண்டு காலங்கள் முன்னே
அண்டங்கள் யாவும் தோன்று முன்னே
அகிலத்தில் மூத்த மொழி
அவனியில் அன்பு மொழி

கம்பனும் கவிச்சக்கரவர்த்திகளும்
உயர் வள்ளுவனும் வாழ்த்திய
வழுவற்ற வண்மொழி - இது
வானிற்கும் மூத்த மொழி

இனிது எது என்றால் - தேனென்பார்
எனைக் கேட்டால் இல்லை என்றுரைப்பேன்
தாய்மொழி தமிழது என்நாவில் இனித்திருக்க
தேனெந்தன் நாவில் தெவிட்டாது இருந்திடுமோ?

காதலையும் பல காதைகளையும்
கடவுளர் பாடல்களையும் கருத்திற் கொண்டு
களம் அமைத்துக் கவி தரும்
காலம் அழித்திட முடியாக் கன்னி மொழி

இன்னும் பல ஆண்டுகள் - இப்
பாரினில் உன்புகழ் பரவிட - என்
வலுவற்ற உடல் கொண்டு வலுச் சேர்ப்பேன்
வாழிய நீ என்றென்றைக்கும்.