நடப்பு கவிதை

குழந்தையின் குரல்........!

25, May 2017
Views 950

நான் ஓா் சிறு குழந்தை
இறைவனின் படைப்பில்
இன்றும் இயல்பு கெடாமல்
இருக்கிறது எங்களின்
குழந்தை மனது.

சின்ன சின்ன குறும்புகளும்
கொஞ்சும் மழலை மொழி
சின்ன சின்ன பிடிவாதம்
சின்ன சின்ன சினுங்கல்
என்றான  அழகான

குழந்தைகளின் உலகமதை
குழிதோண்டி புதைக்கும்
பெற்றோரும் மற்றோரும்
அளக்கின்ற கதைகளினால்
யாருக்கு பலனுண்டு.

என்னைப் போல் இங்கிருக்கும்
எத்தனையோ குழந்தைகளின்
எண்த்தை சொல்லுகிறேன்
ஏக்கத்தை சொல்லுகிறேன்

குழந்தைகளை குழந்தைகளாய்
கொண்டாடி மகிழுங்கள்
வளமான எதிா்காலம்
வளா்வதையும் பாருங்கள்.