நடப்பு கவிதை

பதவி

சுஜாதா
23, May 2017
Views 538

பட்டப் படிப்புப் படித்தாலும்
பதவி இன்றித் தவிக்கின்றனர்
எட்டப்பன் போல எங்கும்
ஏமாற்றும் நாட்டினிலே 
நட்டப்பட்டு விட்டு நாமும்
நாட்டை விட்டு வந்ததனால்
குப்பை கூட்டிக் கழுவித்தானே
குதூகலமாய் வாழுகின்றோம்
வேலை எல்லாம் பிடிப்பதில்லை
வேதனையோ சுவைப்பதில்லை
யாவரையும் மதிப்பதில்லை
மதித்தவர் தான் நிலைப்பதில்லை
படித்தவர்க்குப் பதவி இல்லை
பதவியிலே படித்தோரில்லை