ஹைக்கூ கவிதை

தாயின் கருணை

20, April 2017
Views 712

தன் விருப்புகளை மறந்து
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி
கருணையின் இருப்பிடமாய் அமைந்து
வாழ்க்கை தன்னில்
விழுந்து விடாமல் இருக்க
பிள்ளைக்கு இறைவனை போல
தினம் தினம் துணை நின்று
அவர்களின் கவலைகளை நீக்கி
பாசம் தன்னை பொலிந்து
பிள்ளையின் மகிழ்வில்
உயிர் வாழும் தெய்வம் -அம்மா
அவளின் மனதில் பொங்கி பாயும் பாசம் தன்னை
வடித்திடவே அணு தினம் தமிழ் முத்துக்களில்
சொல் தேடி அலைகிறேன்
உனக்கு நிகராக ஒரு முத்தும்
இன்னும் பார்க்கவில்லையே- அம்மா