காதல் கவிதை

காதலின் மறுபக்கம்

02, August 2017
Views 531

வறண்டு போன நிலத்தை
பசுமையாக்க வந்த மழை நீர் போல
எம் வாழ்வில் நீ வந்ததால்
நானும் இன்ப கடலில்
முழ்கி இருந்தேன்
என்னை தூங்க வைத்து
தாலாட்டி அழகு பார்த்த தோழியே
நீ வந்த போது என் இதயமும்
பூ போல மலர்ந்தது
தேனீக்களும் என்னை
நோக்கி இசை பாடியது
என் வாழ்வும் மலர் சோலை ஆனது
என்னை சந்தோஷ பறவைகளாக
பறக்க தூண்டியாக வந்த காதலியே
நீ தந்து விட்டு போன வலியால்
கால் இருந்தும் பறக்க
முடியாமல் இருக்கும்
பறவை போல ஆனேன்