புரட்சி கவிதை

நன்றாகச் சிந்தியுங்கள்...

Inthiran
14, July 2017
Views 331

வானம் முறைக்கிறது
பூமி சிரிக்கிறது
நாலும் நடக்கிறது
நாயகனின் உத்தரவு

மேலும் தொடருவது
மேடு பள்ளம் தெரிகிறது
கோடும் கிழிக்கிறது
கோபுரங்கள் தடுக்கிறது

ஆள நினைத்தவர்கள்
ஆழ நினைக்கவில்லை
ஈழம் என்ற சொல்லில்
இழந்தவர்கள் ஏராளம்

நீள நினைந்துருக
நிம்மதியும் தொலைகிறது
வாழ வழி தெரிந்த
வல்லூறு பறக்கிறது

கீழிருக்கும் கோழிகளே
கிளறுவதை விட்டு விட்டு
நாளை நடப்பதையும்
நன்றாகச் சிந்தியுங்கள்